Jokes by sivam
- · sivam
- ·
மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில். மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..? கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடா
- · sivam
- ·
கணவன்: (திமிராக) என் போனுக்கு நான் பாஸ்வேர்ட் மாத்திட்டேன். உன்னால கண்டுபிடிக்கவே முடியாது!மனைவி: (சிரித்துக்கொண்டே ) எனக்கு உங்க பாஸ்வேர்ட் தேவையே இல்லைங்க. நீங்க தூங்கும்போது உங்க விரலை எடுத்து 'பிங்கர் பிரிண்ட்' வச்சு லாக் ஓபன் பண்ண எனக்குத் தெரியும். பாஸ்வேர்ட் மாத்துனதை விட, உங்க விரலை எங்கயாவது மாத்தி வைக்க முடியுமான்னு பாருங்க!கணவன்:????..??
- · sivam
- ·
நேர்காணலில் மேனேஜர் கேட்டார், "நாங்கள் உங்களை வேலையில் சேர்த்தால், உங்களுக்கு என்ன செய்யத் தெரியும்?"அதற்கு அந்த இளைஞன், "வேலை செய்யத் தெரியாது சார், ஆனால் அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!" என்றான்.
- · sivam
- ·
மனைவி: (கண்ணாடியைப் பார்த்து கவலையோடு) ஏங்க, வயசாயிட்டே போகுது. முகத்துல சுருக்கம், தலைல நரைமுடி... என்னைப் பார்க்கவே எனக்கே பிடிக்கல. எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்களேன்?கணவன்: (யோசித்துவிட்டு) உன்னோட கண்ணாடியை நீ ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம் தான் பார்க்குற. ஆனா அதே முகத்தை நான் 24 மணி நேரமும் பார்க்குறேன். என் பொறுமையை விட உனக்கு என்ன பெரிய ஆறுதல் வேணும்?
- · sivam
- ·
இந்தபையன் கிட்னி ஆப்ரேஷன் வேணாம்முன்னு சொல்றான் டாக்டர்…..இது அவனுக்கே தெரியுது…. நமக்கும் புரியுது…. செலவுக்கு சுத்தமா பணம் இல்லே……எப்படியாவதுஒரு கிட்னியை வித்து பணம் கொடுக்க சொல்லி அவங்க வீட்டுலே கெஞ்சறாங்களே…சிஸ்டர்…நாம என்னா செய்யுறது…
- · sivam
- ·
ஊழியர் ; பாஸ் எனக்கு ரெண்டு நாள் லீவு வேண்டும்.பாஸ்: கண்டிப்பா கொடுக்குறேன்.ஆனா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்.ஊழியர் : ஓ.கே சார் கேளுங்க.பாஸ் : கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்னான்?ஊழியர் : நல்ல நேரத்தில் சரியான கேள்வி கேட்டீஙக சார்.பாகுபலி கொல்லப்படுவதற்கு முதல் நாள் கட்டப்பா லீவு கேட்டாதாகவும் பாகுபலி மறுத்தாகவும் எனக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கிறது சார்....அதுனாலதான்...பாஸ் : நாலு நாள் லீவு எடுத்துக்கோப்பா...
- · sivam
- ·
*குடிக்காரன் களை…பார்த்தா ஜனங்க ஏன் ஒதுங்கி போறாங்க தெரியுமாடா*…..*தெரியாதே…..நீதான்சொல்லேன்*நம்மளபார்த்தா…..அவ்வளவு பயம் டா*..,*ஆமாமா…ரோடுலே போற…சொறி நாய்ங்க…குணம்எப்படி…இருக்குமுன்னுசொல்லமுடியாது…டபுக்குன்னு மேல..வுழுந்து புடுங்கி வைச்சிடுமே*….
- · sivam
- ·
அவரு ஒரு தடவை என்னை பெண் பார்க்க வந்திருந்தார்!!நான்தான் பிடிக்கலை என்று சொல்லி நிராகரித்து விட்டேன்!இப்ப பாருங்க!!கணவன் மைண்ட் வாய்ஸ் - அட சண்டாளன்!! !! அந்த சந்தோசத்தை இன்று வரை கொண்டாடி கொண்டு இருக்கான்!கொடுத்து வைத்தவன்!நான் வசம்மா மாட்டிகிட்டேன்!!
- · sivam
- ·
கணவன் - என் மனைவி பல்லை பிடுங்குவதற்கு எவ்வளவு ஆகும் !!!!!!!!!!பல் மருத்துவர் - அதுவா ஒரு பல் பிடுங்குவதற்கு ஆயிரம் ரூபாய் ஆகும் !!!!!!!!!!கணவன் - பத்தாயிரம் கூட வாங்கி கொள்ளுங்கள் !!!!!!!!! தயவு செஞ்சு அந்த நாக்கையும் பிடிங்கி விடுங்கள் !!!!!!!அதிகமா நாக்கு மேலே பல்ல போட்டு பேசுறாங்க !
- · sivam
- ·
என்னடா நீ!! வேலைக்கு வரும்போதே! உனக்கு இந்த அஜீரண கோளாறும்! இந்த ' பாம் ' போடுற பிரச்சினை இருக்குன்னு தெரிந்து ! நீ எதுக்குய்யா ! நீர்மூழ்கி கப்பல் வேலைக்கு வந்து சேர்ந்த!!இப்ப பார்!! எல்லாம் மயங்கி கிடக்காங்க!! உனக்காக இப்ப ஜன்னலை திறந்து வைக்க முடியுமா! சண்டாளன்!
- · sivam
- ·
×பொண்ணாடி நீ…உன்னை என் பையனுக்கு கட்டிவைச்சதுக்கு…என் புத்தியை செருப்பாலேயேஅடிச்சிக்கணும்××கொஞ்சம் பொறுங்கள் அத்தை… செருப்பையும்…செல்போனையும் எடுத்து வரேன்×……×எதுக்கடிஅதெல்லாம்×….×செல்போனில் நீங்க செருப்பாலே அடிச்சிக்கிறதை….வீடியோ எடுத்து பேஸ் புக்கிலே போட்டாக்கா லைக்ஸ் அள்ளும்×….