·   ·  274 posts
  •  ·  0 friends

மனதை கரைய வைக்கும் இந்த விளையாட்டு வீரரின் சொந்த வாழ்க்கை

ஜான்-பியர் ஆடம்ஸ் ஒரு பிரெஞ்சு கால்பந்து வீரர். ஒருசமயம் அவரது பழுதடைந்த தசைநாரை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவருக்கு மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவர் செய்த ஒரு தவறு காரணமாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார்.

கோமா நிலைக்குச் சென்றபோது அவருக்கு வயது 34. அவருக்கு இப்போது 71 வயதாகிறது.

அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சுயநினைவின்றி இருக்கிறார். அவர் கோமாவில் இருந்த காலம், தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும் அவர் அறிந்திருந்த காலத்தை விட அதிகம்.

இதில் மிக சோகமான மற்றும் அதிர்ச்சிகரமானது என்னவென்றால், இந்த தவறை செய்த மருத்துவர் மற்றும் அவரது சக ஊழியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.

அத்துடன் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பாழாக்கிய தவறுக்காக சுமார் 815 டாலர்கள் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

அவரது குடும்பம் ஒரு தந்தையையும் ஒரு கணவனையும் இழந்தது மட்டுமல்லாமல் உலகம் ஒரு பெரிய விளையாட்டு வீரரையும் இழந்துள்ளது,

1969 இல் அவரை திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி பெர்னாடெட் இன்று வரை அவரது படுக்கையில் இருந்து கவனித்து வருகிறார், அவருக்கு உணவளிக்கிறார், மேலும் செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளின் உதவியுடன் அவரைக் குளிப்பாட்டவும் 24 மணிநேரமும் பராமரிப்பும் அளிக்கின்றார்.

எந்த ஒரு காதல் கதையும் இதை முறியடிக்க முடியாது.

- ஒரு காதல் கதை. கண்ணீர் கதை. அந்த பெண்ணின் மனவுறுதிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • 38
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.