
பேராசை
ஒரு வேடன் அவனுக்கு தினமும் வேட்டையாடுவது தான் வேலை'' வேறு வேலைக்கு போக மாட்டான் அவனுக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருந்தது அந்த குழந்தைக்கு ஆறு வயது ஆகிறது....
ஒரு நாள் அதிகாலையில் வேட்டைக்கு போனான் வேடன். வேட்டைக்கு போனவன் வேட்டை எதுவும் கிடைக்கவில்லை. மாலை வேளையில் மன உளைச்சலுடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.. அப்போது ஒரு வண்ணப் பறவை குளத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தை பார்த்ததும் தன் வில் அம்பை எடுத்து எய்தான் இறக்கையில் அடிபட்டு பறக்க முடியாமல் விழுந்து விட்டது... வண்ணப்பறவை.
அதை வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்து இதை குழம்பு வைத்து வை நான் சாராயம் குடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டான்..
சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் அவன் மனைவி அந்த பறவையை குழம்பு வைக்கவில்லை ஏன் சமைக்கவில்லை?? என்று கோபமாக கேட்டான்'' நம் மகளுக்கு இந்த பறவையை ரொம்ப பிடிச்சிருக்காம். அதனால்தான் இந்த பறவையை குழம்பு வைக்கவில்லை என்றாள்..
இவனுக்கு கோபம் ஏறிவிட்டது குடிபோதையில் தன் வில்லம்பை எடுத்தான் தன் மனைவி மீது எய்தான் மார்பில் பாய்ந்து இறந்து விட்டாள்..
மனைவி இறந்தவுடன் அவன் போதை தெளிந்து விட்டது. ஊர் பெரியவர்களின் தயவோடு உடலை அடக்கம் செய்தான்.. அந்த குழந்தை அடிபட்ட பறவைக்கு மருந்து போட்டு தன் பக்கத்திலே வைத்துக் கொண்டது..
கொஞ்சம் கொஞ்சமாக அந்த புண் ஆறியது வண்ணப்பறவை பேச ஆரம்பித்தது அந்த குழந்தைக்கு பறவையை விட்டால் நமக்கு வேறு யாருமில்லை என்ற எண்ணம் மனதில் தோன்றியது...
அந்த பறவையை அன்போடு அழைத்துக் கொண்டாள். இந்த குழந்தை என்ன பேசுமோ அதை திரும்ப சொல்ல ஆரம்பித்தது அந்த வண்ணப்பறவை.
தனிமையில் இருக்கும் வேடனுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. ஏற்கனவே திருமணம் ஆகி கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் முடித்துக் கொண்டான் வேடன்...
வந்தவள் அந்த குழந்தையையும் அவனையும் நல்ல முறையில் கவனித்துக் கொண்டாள்.. அந்த குழந்தை அந்த வண்ணப்பறவையை நல்லா கவனித்துக் கொண்டது""
அப்போது வெயில் காலம்"" ஊரெல்லாம் அம்மை நோய் போட்டிருந்த காலம் குழந்தைக்கும் அம்மை போட்டிருந்தது.
சித்தி வேலைக்கு போய்விட்டால் அப்பா வேட்டைக்கு போய் விட்டான்.
இந்த குழந்தை மட்டும் தனியாக வீட்டிலிருந்தது அப்போது ஒரு நாகப்பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டது. நாகப்பாம்பு வந்ததை அந்த பறவை பார்த்துவிட்டது. உடனே அந்த பாம்பை கொத்திக் கொன்று விட்டது... அந்த பறவை..
வேடன் வந்து பார்த்தான் தன் மகள் அருகில் பாம்பு இறந்து கிடந்தது. தன் மகளை காப்பாற்றியது இந்த பறவை தான் என்று நினைத்துக்கொண்டான்
அதற்குப் பிறகு இவனும் அந்த பறவையின் மீது அன்பு பாசம் காட்டி வளர்ந்து வந்தார்கள்..
ஒருநாள் வேடன் வேட்டைக்கு போயிட்டு வரும் வேளையில் ஒரு புதையல் ஒன்றைக் கண்டெடுத்தான் அதை வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் அந்த புதையலை காட்டினான். பானை முழுவதும் தங்க காசுகள் இருந்து மனைவிக்கு அந்த புதையல் மீது ஆசை வந்துவிட்டது.
இந்த புதையலை எப்படியாவது நம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தால்.. அப்போது தன் அக்காவைக்கான தம்பி வந்திருந்தான்..
தன் தம்பியிடம் என் கணவர் வேட்டைக்கு போயிட்டு வரும்போது அவருக்கு ஒரு புதையல் ஒன்று கிடைத்திருக்கிறது முழுவதும் தங்க காசுகள் அதை அவர் வைத்திருக்கிறார்.
அந்த தங்கப் புதையலை நாம் எடுத்துக் கொண்டு இங்கிருந்து போய்விட வேண்டும் என்று தம்பியிடம் சொன்னாள்..
அக்கா உனக்கு இப்போது தான் திருமணம் முடிந்திருக்கிறது இப்போ எடுத்துக் கொண்டு போனால் சந்தேகம் வந்துவிடும் அதனால் சந்தேகம் வராமல் இருக்க ஒரு வழி சொல்லுகிறேன் ""கேள் நீ வேலைக்கு போகும் இடத்திலிருந்து கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்துட்டு வா''' வந்து பாலில் கலந்து அவர்கள் இருவருக்கும் கொடு.. அவர்கள் இரண்டு பேரும் இறந்து விடுவார்கள் நம் புதையலை எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று ஆலோசனை சொன்னான்..
சரி தம்பி நல்ல யோசனை தான் யாருக்கும் சந்தேகம் வாராது என்றாள்
சரி அக்கா நான் ஊருக்கு போறேன் நீ காரியத்தை முடித்து விட்டு வா என்று சொல்லி விட்டு கிளம்பினான்.. இவர்கள் இருவரும் பேசுவதை அந்த பறவை கேட்டுக்கொண்டேஇருந்தது.
அவன் சொன்னது போல வேலைக்கு போன இடத்திலிருந்து கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்துக் கொண்டால் இரவு உணவு முடிந்ததும் மூன்று டம்ளர் பால் காய்ச்சினாள்
இரண்டு டம்ளரில் பாலில் விஷத்தை ஊத்தி கொண்டு.. தனக்கு உண்டான டம்ளரை தனியாக வைத்துக் கொண்டாள்.
மனைவி வந்து இந்தாங்க பால் குடிங்க என்று கொடுத்தாள் அந்த கிளி சாப்பிடாதீர்கள் ""விஷம் ""விஷம் என்று கத்தியது!! இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் குழந்தை முதலில் பாலை குடிக்க போனது அந்த குழந்தையின் பாலை தட்டி விட்டது பறவை இவனுக்கு அப்பவும் ஒன்றும் புரியவில்லை... இவனுக்கு அந்த பறவை மீது கொஞ்சம் கோபம் வந்தது.. ஏன் இப்படி செய்கிறது என்று நினைத்தான்
அவன் வைத்திருந்த பாலை அந்த பறை குடித்தது,, குடித்ததும் கீழே விழுந்துவிட்டது பறவையின் வாயிலிருந்து நுரை தள்ளி இறந்துவிட்டது.
அதற்குப் பிறகு அவன் சுதாரித்துக் கொண்டு என்ன செய்தாய்?? என்று கேட்டான் அவள் உண்மையை சொல்லிவிட்டாள்.. அனக்கு கோபம் வந்தது இந்த புதையலுக்கு ஆசைப்பட்டு தானே என்னையும் என் மகளையும் விஷம் வைத்துக்கொள்ள பார்த்தாய்..... என் குடிபோதையில் என் மனைவியை இழந்தேன்'' என்னையும் என் மகளையும் காப்பாற்றிய பறவையை இழந்தேன். இனிமேல் நான் எதையும் இழக்க தயாராக இல்லை.. இந்தா இந்த புதையலை நீயே வைத்துக் கொள். இந்தப் புதையலுக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் என்று கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டான்..
இவள் ஆசைப்பட்டுது போல புதையல் கையில் கிடைத்து புதையலை தன் தம்பியிடம் காட்டினால் அவன் கண் சொக்கி போனான் அவ்வுளவும் தங்கம்..
இவ்வளவு தங்கம் இருக்கும்போது நாம் ஏன் வேலைக்கு போக வேண்டும்? என்று எண்ணி எல்லோரும் வீட்டில் உட்கார்ந்துகொண்டு வேலைக்கு போகாமல் சாப்பிட்டார்கள்..
இருந்து சாப்பிட்டால் இரும்பும் கரையும் என்று சொல்வார்கள். புதையல் குறைய ஆரம்பித்து ஆரம்பித்துவிட்டது.
அக்காவுக்கு மதிப்பு குறைந்துவிட்டது புதையல் இருக்கும் வரை அக்காவுக்கு அந்த மதிப்பு இருந்தது....
புதையல் குறைய குறைய மதிப்பு குறைந்துவிட்டது.. ஒரு நாள் அக்காவை அடித்து விட்டை விட்டு துரத்தி விட்டான்..
அதற்குப் பிறகு அக்கா தன் தவறை உணர்ந்தாள்.. புதையலுக்கு ஆசைப்பட்டு நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டோமே... என்று எண்ணி எண்ணி வருந்தி உடல் நலம் குன்றி இறந்து போய்விட்டாள்.
பேராசையால் வாழ்க்கையும் போய் உயிரும் போனது