
ஜப்பான் நாட்டு மக்களின் நேர்மை
சமீபத்தில் ஜப்பானில் ஒரு அசாதாரண சம்பவம் நடந்தது.
அங்குள்ள டோல் சிஸ்டம் (Toll System) 38 மணி நேரம் வேலை செய்யாமல் போனது.
அந்த நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் சாலைகளில் சுதந்திரமாகப் பயணம் செய்தார்கள்.
யாரும் நிறுத்தாமல், எவரும் பணம் கேட்காமல் — முழுக்க முழுக்க FREE TRAVEL!
ஆனால்…
அந்த சிஸ்டம் சரியான பின், மக்களின் மனசாட்சி தான் பேச ஆரம்பித்தது.
24,000க்கும் மேற்பட்ட மக்கள் —
யாரும் கேட்டதே இல்லை, அழுத்தமே இல்லை… இருந்தும்,
தாங்களே சென்று தங்களுக்கு உரிய டோல் தொகையை சுயம்வரமாக கட்டிவிட்டார்கள்!
உலக நாடுகள் எத்தனை முன்னேற்றம் அடைந்தாலும், மக்களின் நேர்மையும், நம்பிக்கையும் தான் அந்த நாட்டின் உண்மையான செல்வம் என்பதை ஜப்பான் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.