
இன்றைய ராசி பலன்கள் - 8.9.2025
மேஷம்
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணம் சார்ந்த எண்ணம் மேம்படும். கலைத்துறைகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் சாதகமாகும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
ரிஷபம்
திட்டமிட்ட பணிகள் நடைபெறும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
செயல்களில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்குள் சில புரிதல்கள் ஏற்படும். வெளியூர் பொருள்கள் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான தகவல் வரும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பயணம் நிமித்தமான சில செயல்பாடுகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சுக்களில் பொறுமை வேண்டும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்படும். அரசு பணிகளில் சில விரயம் உண்டாகும். ஆர்வமின்மையான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பூர்விக பிரச்சனைகள் குறையும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உறவுகள் வகையில் புரிதல்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மனதளவில் ஒருவிதமான பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஊக்கத் தொகைகள் மற்றும் ஓய்வூதிய தொகைகள் கிடைப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வருத்தம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். தாய் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் வழியில் அனுசரித்து செல்லவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் பிறக்கும். சமூக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெறும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
கும்பம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணிகளில் துரிதம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
உயர் கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு