
இன்றைய ராசி பலன்கள் - 7.9.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு காரியத்தில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வரவுகள் வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
நிர்வாகத்துறையில் அறிமுகம் ஏற்படும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் மதிப்புகள் கூடும். தந்தை வழியில் ஆதரவுகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
திட்டமிட்ட பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் கோபம் இன்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்களும் ஒத்துழைப்பும் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சினைகள் குறையும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புது விதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிறு கடன்களை அடைப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
நினைத்த சில காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். உறவுகளுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். துணைவர் வகையில் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வாகன மாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். வேலையாட்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். உங்கள் கருத்து உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஆதாயம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம்
மற்றவர்களில் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வாடிக்கையாளர்கள் இடத்தில் அமைதி காக்கவும். உடலில் ஒருவிதமான அசதியும் மனச்சோர்வு வந்து நீங்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். தானிய தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்