·   ·  140 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 5.8.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடும், ஆர்வமும் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பணிகளில் மதிப்புகள் மேம்படும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தன வரவுகளால் நெருக்கடிகள் மறையும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுப காரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் கை கூடும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கடகம்

சிந்தனைகளில் இருந்த சஞ்சலம் விலகும். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். உத்தியோக பணிகளில் உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சமூக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி

இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். காப்பக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். தன வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். புதிய வேலைகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பாடங்களில் இருந்த குழப்பங்கள் குறையும். மனை விருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

வாடிக்கையாளர் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு

மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்களை பற்றிய விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சில பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். கல்வி பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். பிறமொழி மக்களிடத்தில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின் போது கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கும்பம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல்கள் உருவாகும். அரசு விஷயங்களில் இருந்த தாமதங்கள் விலகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 1195
  • More
Comments (0)
Login or Join to comment.