·   ·  285 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 19.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய திட்டங்கள் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை வெற்றிகொவீர்கள். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

ரிஷபம்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தள்ளிப் போன காரியங்கள் நடைபெறும். அரசு விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்கள் சாதகமாக பலன்களை உருவாக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

பழைய பிரச்சினைகளுக்கு சில தீர்வுகள் ஏற்படும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். எழுத்து துறைகளில் அனுகூலம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

தந்தையிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மாற்றம் பிறக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

சிம்மம்

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கேலிப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். இனம் புரியாத பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபார முயற்சிகளில் பொறுமை காக்கவும். அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

முடிவுகளில் விவேகம் வேண்டும். மனதளவில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். உறவுகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல்கள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடலில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

துலாம்

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். மூத்த உடன் பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பழைய நண்பர்கள் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தநிலை குறையும். உயர் அதிகாரிகளின் வழியில் ஆராதரவான சூழல் ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

எதிர்பார்த்து இருந்த உதவிகள் சாதகமாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகப் பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதியவர்களின் நட்புக்களால் உற்சாகம் ஏற்படும். பணி சார்ந்த பழைய பிரச்சனைகள் குறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

எதிர்பாராத சில செலவுகள் செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். முன்ஜாமின் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களால் உற்சாகம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். முயற்சிகளில் இருந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மீனம்

இழுபறியான வழக்குகளில் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் மன மகிழ்ச்சியை உருவாக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 278
  • More
Comments (0)
Login or Join to comment.