·   ·  102 posts
  •  ·  0 friends

அஜீரணம் வாயுத்தொல்லை இரண்டுமே குணமாக......

ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துகொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு பங்கு அளவு சீரகம் சேர்த்து நன்றாக கலந்து பாட்டிலில் அடைத்து வைக்கவும். ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் அஜீரணம் நீங்கும். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. வாயுத்தொல்லைகள் முழுமையாக குணமடையும் வரை இதை சேர்க்கலாம்.

சுக்கு எந்த வகை உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் இருக்கும் நச்சுக்களை முறித்து வெளியேற்ற செய்யும்.

சுக்கு வாய்வு கோளாறை வெளியேற்றி அஜீரண குறைபாட்டை போக்கும். குழந்தைகளுக்கு சுக்கு கொடுத்தால் செரிமான மண்டலம் சீராகி பசியின்மை பிரச்சனையை போக்கும். வாயுத்தொல்லை இருப்பவர்கள் சுக்கை வாரம் இரண்டு முறையாவது சாப்பிடுவது நல்லது.

சீரகம் வயிற்று வலி, அஜீரணம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. தினசரி சீரக நீர் குடித்துவந்தாலே பெருமளவு வாயுத்தொல்லை மற்றும் அஜீரண கோளாறு தடுக்கலாம்.

  • 1401
  • More
Comments (0)
Login or Join to comment.