·   ·  1697 posts
  •  ·  0 friends

இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? - கிருபானந்த வாரியார் கூறிய விளக்கம்

வாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்திகர் ஒருவர் எழுந்து "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" என்ற வினாவை எழுப்பினார். சம்பாஷணைகள் ஆரம்பமானது.

"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரிசியா, கோதுமையா?"

"அரிசி!"

"அரிசியில் என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம்?"

"சாதம், பொங்கல், இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிறீர்கள்?"

"இல்லை அரிசியை ஊறவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்த்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்"

"எப்படி சாமி வெறும் அரிசியை ஊறவைத்து தின்பது?. நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"

"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள்."

கேள்வி கேட்ட நாத்திகர் மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.

ஒரு பிரச்சார கூட்டத்தில் கேட்டது.

  • 152
  • More
Comments (0)
Login or Join to comment.