·   ·  1375 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 1.5.2026

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசார விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். நல்லவர்கள் நட்பு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பீர். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கூட்டுத் தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மிதுனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். பணவரவு உண்டு. பிள்ளைகளின் தனித்திறமை அறிந்து அவர்களை வழி நடத்துவீர். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

கடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதியவர் நண்பராவார். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப் போன மகளின் திருமணம் உடனே நடக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பூர்வீக வீடு தொடர்பாக உறவுகளுக்குள் மனஸ்தாபம் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

துலாம்: மகனின் வேலை, மகளின் திருமணம் என்று குழப்பம், அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நிதானமாக வசூலிக்கவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்து விற்பனை ஆகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் உங்கள் பணிகளை பகிர்ந்து கொள்வர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: மின் சாதனங்களை மாற்றியமைக்க முயற்சிப்பீர். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புது வழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுண்டு. கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

கும்பம்: தடை நீங்கும். இழுபறியாக இருந்த பணிகள் முடிவடையும். தொட்டது துலங்கும். அரசு தொடர்பான காரியங்கள் உடனடியாக நிறை வேறும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

மீனம்: எதிலும் கவனம் தேவை. முன்கோபம் வரும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். பங்குதாரரின் ஆலோசனையை அலட்சியப்படுத்தாதீர்.

  • 26
  • More
Comments (0)
Login or Join to comment.