·   ·  958 posts
  •  ·  0 friends

சிறுநீரகப் பிரச்சனைக்கு உதவும் இயற்கை மருந்துகள்

கருஞ்சீரகத்தை நன்கு இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.

காரட், பாகற்காய், இளநீர் போன்றவற்றில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரக கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

கேரட்டை சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை தினமும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் குறையும். ஓரிதழ் தாமரை இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து மோரில் கரைத்து காலையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்..

- தகவல்கள் இணையத்தில் இருந்து......

  • 56
  • More
Comments (0)
Login or Join to comment.