- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 1.4.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும்.
துலாம்: முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.
தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
மகரம்: அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய பங்குதாரர் அறிவுரை வழங்குவார். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தில் நிதானம் தேவை. அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். தந்தைவழி உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிட்டும்.