- · 0 friends
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் (பெரம்பலூர்):
- மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்
- அம்மனின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த காவல் தெய்வமான சோலை முத்தையா மற்றும் அகோர வீரபத்திரர் சன்னதிகள் நேர் எதிரே அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.
- மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி, செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமி மலை கோவில் திசையை நோக்கி தீபாராதனையை காட்டியபிறகே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம்.
- மதுரகாளியம்மன் கோவிலில் எந்த திருவிழா நடந்தாலும், முதல் மரியாதை செல்லியம்மனுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கம்.
- இக்கோயிலில் மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர்.
- இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர் பக்தர்கள்.
- இங்கு மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கத் தேர் உள்ளது.
- இக்கோயிலில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது
- ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழாவும் தொடங்கும்.
- 8-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர்.
- அன்று இரவு சிறப்பு பூஜையும் மறுநாள் அதிகாலையில் கடாவெட்டு நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும்
- திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது.