- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 19.2.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்களும் அறிமுகங்களும் உருவாகும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். துணிவு வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிதுனம்
நண்பர்கள் மூலம் அலைச்சலும் அனுபவம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் நன்மைகள் ஏற்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். அயல்நாட்டு தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
ஒப்பந்தம் சார்ந்த பணிகள் மூலம் லாபங்கள் மேம்படும். மனதில் புதுமையான இலக்குகள் பிறக்கும். குழந்தைகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சுத் திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். பார்வை பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
திடீர் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களிடம் பொறுமையை கையாளவும். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கும்பம்
மனதளவில் சிறுசிறு குழப்பம் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். முயற்சிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
புதுவிதமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் அதிகரிக்கும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்