·   ·  927 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 28.1.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பேச்சு திறமை மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். புண்ணிய தல பயணம் கைக்கூடி வரும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்  

 

கடகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை  

 

சிம்மம்

எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி

தடையாக இருந்தவர்கள் விலகி செலவார்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல் மேம்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

துலாம்

பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளால் எதிர்பார்த்த சில ஒத்துழைப்புகள் தாமதமாக கிடைக்கும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு

தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்து குழப்பங்கள் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கும்பம்

பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை குறைப்பீர்கள். உத்தியோக தொடர்பான பணிகளில் பொறுப்பும் அதிகாரமும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மீனம்

அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்லவும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வழக்கு பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். எதிர்பாராத சில அதிஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

  • 113
  • More
Comments (0)
Login or Join to comment.