·   ·  1836 posts
  •  ·  0 friends

சண்டை

ன்சொல்பேச்சுநீங்ககேக்கறதில்லே……உங்ககிட்டே பேச மாட்டேன் போங்க….

நீ மட்டும் கேக்கிறியா…..உன் கிட்டே வாழவே மாட்டேண்டி…போடி….

ஏண்டா….பேசுவதற்கும்….. வாழுறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்குதடா……

அதெல்லாம் எனக்கு தெரியாது..,.உன் மூஞ்சை பார்த்தாலேஎனக்கு பிடிக்கிலே….. கீதா சொன்னா…நீ ஒரு சுடு மூஞ்சியாம்..,.

எந்த கீதா………என்னடா சொன்னா…..

அதான் உன் கல்லூரி தோழியாமே….

ஓ……. அவளா….கருவாட்டு மூஞ்சி…,.

அவளை பத்தி அசிங்கமாபேசாதே.,. எனக்கு கெட்ட கோவம் வரும்…,

அவளை பேசுனா….உனக்கு ஏண்டா கோபம் வருது….

உன்னை,டைவெர்ஸ்பண்ணிட்டுஅவளைகட்டிக்க போறேன் …..அவளும் என்னை விரும்புறா……

அடி பாவி……. இது அவளுக்கு மூணாவது கல்யாணம்….அவ கெட்ட கேட்டுக்கு இது வேணுமா….. நல்லா பிராக்கெட் போடறாடா உன்னை..,..

என்ன மூணாவது கல்யாணமா.,.,..

ஆமா அவளை பத்தி எனக்கு தான் தெரியும் ……ஏற்கனவே ரெண்டுபேரு சப்பி போட்ட பனங்கொட்டைஅவ…. அதை நீ……….

என்னடி அசிங்கமா பேசறே…….

நான் எங்கே பேசினேன்……அதை நீ…. விலை கொடுத்துவாங்கி…. நாசமா போக போறே…..

ஆமாண்டி அவளை கட்டிக்கனமுன்னா…ரெண்டு லட்சம் பணம் தரணுமாம்….. என்னை கேட்டாள்….

அதான் சொன்னேனே…. என்னை போலஅவளும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கிறா…..அதுக்கு எதைவேணாலும் செய்வா. ….

அடி நாசமா போறவளே….. நீ ஏன் கந்து வட்டிக்கு கடன் வாங்கினே…. எவ்வளவு வாங்கி தொலைச்சே…..

நானும் ரெண்டு லட்சங்க…..தெரியாம.வாங்கிட்ட்டேங்க

வாங்கி என்னடி செஞ்சே…..

எங்கம்மா வீட்டுலே ரொம்பகஷ்டபடறாங்கன்னுஅவங்களுக்குவாங்கி கொடுத்தேன்….

உங்கம்மாவுக்கு தானே…சரி விடு …. ஆபிசில் லோன் போட்டு உனக்கு கொடுக்கிறேன்….. கடனை அடைசிச்சிட்டு மறுவேலை பாரு…..

நல்லதுங்க……. உங்கள போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்……அப்ப.. கீதா…..

அவ கிடைக்குறா சோதா ……. உனக்குமுன்னாடி அவஎல்லாம் சாதா….

சரி வாங்க… தூங்க போகலாம்…..

  • 27
  • More
Comments (0)
Login or Join to comment.