ஒரு பிளேடு மற்றும் ஸ்ட்ரோ மூலம் மருத்துவர்கள் உயிரை மீட்ட சம்பவம்
சாலையில் இரத்தத்தில் மிதந்து, மூச்சு விட முடியாமல் போராடும் இளைஞன்… சுற்றிலும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் மக்களின் நிலை… மருத்துவமனையை அடைவதற்கும் நேரம் இல்லாத அந்த நிமிடம்! அங்கே தான் தெய்வம் போல அந்த மூன்று மருத்துவர்கள் வந்தார்கள்.
எர்ணாகுளம் உதயம் பேரூரின் சாலையில் நடந்தது, வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிசயம். வாகன விபத்தில் காயமடைந்த லினீஷ், மூச்சுக்குழாய் அடைந்து ‘ரெஸ்பிரட்டரி அரெஸ்ட்’ நிலைக்கு வந்திருந்தார்.
அந்த நேரத்தில் டாக்டர் தோமஸ் பீட்டர், அவரது மனைவி டாக்டர் திடியா (இந்திரா காந்தி ஹாஸ்பிடல்), டாக்டர் மனூப் (கோட்டயம் மெடிக்கல் கல்லூரி) ஆகியோர் மட்டுமே அருகில் இருந்தனர். ஒரு ஆம்புலன்ஸ் வரவைத்து இவரை அதில் ஏற்றி ஆஸ்பத்திரி வரை கொண்டு செல்ல நேரமில்லை அதுவரை உயிர் தாங்காது
பின்னர் நடந்தது அவசர அறுவை சிகிச்சை!
கையில்தான் அறுவை கருவிகள் இல்லை. ஊருக்காரர்கள் ஓடி கொண்டு வந்த ஒரு ஷேவிங் பிளேடு மற்றும் பழச்சாறு குடிக்கும் ஸ்ட்ரோ! 🥤
சாலையில் வைத்தே, பிளேடு கொண்டு மூச்சுக்குழாயை திறந்து, ஸ்ட்ரோவை அதன் வழியாக வைத்து, அவர்கள் அந்த இளைஞருக்கு மூச்சை வழங்கினர். ஊருவாசிகளும் போலீசாரும் மொபைல் ஃபிளாஷ் லைட் கொண்டு ஒளி அளித்து உதவி செய்தனர்.
வையிடில் well care மருத்துவமனையில் கொண்டு சென்றபோது, அந்த இளைஞரின் உயிர் பாதுகாப்பாக இருந்தது. அன்புள்ள மருத்துவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 🫡. இருப்பதை கொண்டு சிறப்புடன் போராடி ஒரு உயிரை மீட்டு ஒரு குடும்பத்திற்கு நிம்மதியை தேடி தந்த உண்மையான ஹீரோக்கள்!