- · 0 friends
கஞ்சத்தனம்
கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சு கோமதி... .இந்த 7 வருஷத்துல அவளோட புருஷன் கணேசன் அவளுக்கு ஒரு புடவை கூட வாங்கி தந்ததில்லை.
திருமணத்திற்கு எடுத்த ஒரு ஆறு புடவைகள் மட்டுமே இருக்கிறது
தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், "உனக்கு ஏற்கனவே புடவை இருக்கே"னு ஒரே வார்தை.
அந்த புடவையும் கல்யாணத்துக்கு அவ அம்மா போட்டு அனுப்புனது.
7 வருஷமா.. அதையே திரும்ப திரும்ப துவைச்சு போட்டு போட்டு நிறம் போயிடுச்சு.
ஒரு ரூபாய் கூட கோமதியின் சந்தோஷத்துக்காக செலவு செய்ததில்லை கணேசன்.
அவளுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்.
தெருவுல ஐஸ்கிரீம் வண்டி போகும்போது.. அவ கண்ணுல ஒரு ஏக்கம் வரும். கணேசன் அதை பார்தும் பார்காத மாதிரி வேகமா நடப்பான்.
"அதெல்லாம் வீண் செலவு"னு சொல்லுவான்.
சாப்பாட்டுக்கு மட்டும் பணம் கொடுப்பான்.
அதிலும் சிக்கனம்.
காய்கறி வாங்க போனாலும்..
, "அது வேண்டாம், இது விலை அதிகம்"னு கணக்கு போடுவான்.
கோமதி வாரம் முழுக்க உருளைக்கிழங்கு குழம்பும், தக்காளி ரசமும் தான்.
அவளுக்கு மீன் பிடிக்கும்.
7 வருஷத்துல ஒரு தடவை கூட வாங்கி கொடுத்ததில்லை.
பக்கத்து வீட்டு சுமதியின் புருஷன் மாசம் ஒரு தடவை சினிமா கூட்டிட்டு போவான்.
பொட்டு, வளையல், சின்ன சின்ன பரிசு வாங்கி கொடுப்பான்.
சுமதி சிரிச்சுக்கிட்டே வரும்போது
கோமதி கதவு மறைவுல நின்னு பார்ப்பா.
கண்ணுல துளி வரும்.
உடனே துடைச்சுக்குவா.
"எனக்கு அதெல்லாம் தேவையில்லை"னு தன்னை தானே சமாதானப்படுத்துவா.
கணேசன் கஞ்சன் இல்லை. கருமி. தனக்கு கூட செலவு செய்ய மாட்டான்.
7 வருஷமா ஒரே செருப்பு. அடித்தேய்ஞ்சு போயிடுச்சு. அப்பப்போ செருப்ப தைக்கும் தொழிலாளிடம் கொடுத்து சரி செய்து கொள்வான்
பேங்க்ல லட்ச லட்சமா பணம் இருக்கு.
ஆனா அந்த பணம் அவனுக்கு மட்டும்தான்.
மனைவி, பிள்ளைங்க அவனுக்கு பணம் செலவாகுற பொருள்.
கோமதி நரக வாழ்கை வாழ்ந்தாள்
வெளியே சொல்ல முடியாது.
"புருஷன் கஞ்சன்னு சொன்னா..... ஊர் என்ன சொல்லும்"னு வாயை மூடிக்கிட்டா.
இரவு படுக்கும்போது தலையணையை நனைச்சு அழுவா.
"கடவுளே... நான் என்ன தப்பு பண்ணேன்"னு கேட்பா.
7.வது வருஷம் தீபாவளி வந்தது.
வழக்கம் போல கணேசன் ஒரு பைசா கொடுக்கலை.
கோமதி அந்த 7 வருஷமான..
பழைய புடவையை துவைச்சு காய வச்சா. .
நிறம் முழுக்க போயி, வெள்ளையா மாறிடுச்சு.
அதை கட்டிக்கிட்டு தான் கோயிலுக்கு போனா.
கோயில்ல ஒரு வயசான அம்மா அவளை பார்த்ததும் நின்னுட்டாங்க.
கண்களில் கருணைப்பார்வை மிளிர..
உதட்டில் புன்னகை தவழ...
"ஏம்மா... உன் புடவை ஏன் இப்படி இருக்கு"னு கேட்டாங்க.
ராதா எதுவும் சொல்லாம சிரிச்சா.
அந்த அம்மா அவ கையை பிடிச்சு, "வா"னு கூட்டிட்டு போனாங்க.
அவங்க பெயர் லட்சுமி அம்மா.
ஊர்ல பெரிய பணக்காரங்க.
கணவன் இறந்து 10 வருஷம் ஆச்சு.
பிள்ளைங்க வெளிநாட்டுல.
தனிமையில வாடுனாங்க.
அவங்க கோமதியை பார்ததும் ஏதோ ஈர்ப்பு.
"என் கூட இருக்கியா அம்மா.
எனக்கு பேச ஆள் இல்லை.
உனக்கு சாப்பாடு, துணி, எல்லாம் நான் பார்துக்குறேன்"னு சொன்னாங்க.
கோமதி முதல்ல மறுத்தா.
ஆனா லட்சுமி அம்மா விடலை.
"உன் கணவர்கிட்ட பேசுறேன்"னு சொல்லி கணேசனை கூப்பிட்டாங்க.
கணேசன் முதல்ல மறுத்தான்.
"என் பொண்டாட்டியை
நான் பார்துக்குறேன்"னு சொன்னான்.
ஆனா லட்சுமி அம்மா சொன்னாங்க,
"மாசம் 15,000 சம்பளம்.
வாரம் ஒரு நாள் வீட்டுக்கு போகலாம்.
உனக்கும் பணம், அவளுக்கும் நிம்மதி".
பணம்னு கேட்டதும் கணேசன் சரின்னுட்டான். கோமதியை அனுப்பி வச்சான்.
அந்த நாள்ல இருந்து கோமதி
வாழ்க்கை மாறுச்சு.
லட்சுமி அம்மா அவளை மகளா பார்த்தாங்க.
கோமதியும் லட்சுமிமாலை தாயாக பார்த்தாள்
முதல் மாசமே புது புடவை 5 வாங்கி கொடுத்தாங்க.
உன் மனம் சந்தோசமாக இருந்து
"நீ சிரிக்குறத பார்க்கணும்மா"னு சொன்னாங்க.
கோமதி ஏழு வருஷத்துக்கு அப்புறம்
முதல் தடவையா மனசு விட்டு சிரிச்சா.
ஐஸ்கிரீம் சாப்பிட்டா.
சினிமா பார்த்தா.
தனக்கு பிடிச்ச மீன் குழம்பு சமைச்சு சாப்பிட்டா.
லட்சுமி அம்மாவும் கோமதியும் தாயும் மகளும் போல பாசத்துடன் ஓர் ஆண்டு காலம் ஓடியது
ஒரு வருட காலம் கழிச்சு லட்சுமி அம்மா இறந்துட்டாங்க.
இறக்கும்போது உயில் எழுதி வச்சுருந்தாங்க.
தன் சொத்துல பாதியை கோமதிக்கு
எழுதி வச்சுருந்தாங்க.
"என் கடைசி காலத்துல என்னை பார்த்துக்கிட்ட கடவுள் நீதான்மா"னு எழுதிருந்தாங்க.
கோமதிக்கு 50 லட்சம் கிடைச்சது.
அவ வீட்டுக்கு வந்து கணேசன் முன்னாடி... அந்த பணத்தை வச்சா.
கணேசன் கண்ணை விரிச்சு பார்த்தான்.
"எனக்கு கொடு"னு கையை நீட்டினான்.
கோமதி சொன்னாள்,
"7 வருஷம் நான் கேட்டேன்.
ஒரு புடவை கூட வாங்கி தரலை.
இப்போ இந்த பணம் என்னோடது.
நான் எனக்காக வாழ போறேன்".
அன்னைக்கு முதல் தடவையா கோமதி தனக்கு பிடிச்ச புடவையை வாங்கினா.
தனக்கு பிடிச்ச சாப்பாட்டை சாப்பிட்டா.
தனக்காக வாழ ஆரம்பிச்சா.
கணேசன் இன்னும்
அதே பழைய செருப்பை போட்டுக்கிட்டு,
பேங்க் பாஸ்புக்கை பார்துக்கிட்டு உக்காந்துருக்கான்.
அவன்கிட்ட கோடி இருக்கு.
ஆனா வீட்ல யாரும் இல்லை.
கோமதி சொல்றா,
"கடவுள் என்னை தண்டிக்கலை.
என்னை சோதிச்சாரு.
நான் தாங்குனதால தான் எனக்கு
இந்த பரிசு கிடைச்சது".
இப்போ கோமதி ஊர்ல உள்ள
ஏழை பொண்ணுங்களுக்கு..
புடவை வாங்கி கொடுக்குறா.
"நான் அழுதது போதும்.
இனி வேற யாரும் அழக்கூடாது"னு சொல்றா.
கஞ்சத்தனம் செய்து சேர்த்து வச்ச பணம் எல்லாம் கல்லறைக்கு வராது.
ஆனா அன்பா கொடுத்த ஒரு புடவை, ஒருத்தியோட வாழ்க்கையே மாத்தும்.