- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 24.10.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். வாகனச் செலவு நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: சிலருக்கு பெரிய பொறுப்புகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்.
மிதுனம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கடகம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகை யுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழலை சமாளிக்க வேண்டி வரும். வீண் விவாதங்கள் வேண்டாம். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கன்னி: தடைபட்டுவந்த காரியம் சுமுகமாக முடியும். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். வியாபாரத்தில் பிரமுகர்களை சந்திக்க நேரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
துலாம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
விருச்சிகம்: வீட்டில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
தனுசு: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் நல்ல லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்: கருத்துமோதல் விலகி தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளால் உறவினரிடையே மதிப்புயரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர். கடின உழைப்பால் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
கும்பம்: பணவரவு உண்டு. மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: சந்திரன் தொடர்வதால் கோபத்தை குறைப்பது நல்லது. வீட்டில் ஓரளவு அமைதியுண்டு. அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.