பரிசாக கிடைத்த கார்
கணவன்- மனைவியான தம்பதிகள் ஜோடிக்கு மூன்று மகள்கள். அவர்களுக்கு திருமணமான மருமகன்கள் ஆகியோருக்கும் சேர்த்து மூன்று ஜோடிக்குமாக மூன்று வீடுகள் கட்டிக் கொடுத்து பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.
ஒரு நாள் மாமியாருக்கு மூன்று மகள் மற்றும் மருமகனுக்கு சொத்தில் எந்த அளவு பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைவில் வந்தது. எனவே அவர்கள் மூவருக்கும் சோதனை வைக்க விரும்பினார்.
முதல் நாள் அன்று வீட்டின் மூத்த மருமகனை அழைத்துக் கொண்டு மருமகனே!என்னை இங்கிருக்கும் ஏரியில் நம்முடைய படகில் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.
மருமகனும் மாமியாரை அழைத்துக் கொண்டு படகில் சென்றார்.ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயம் மாமியார் சின்னதாக டான்ஸ் ஆடி ஏரியில் விழுந்து விட்டார் மருமகன் உடனே பதறிப்போய் ஏரியில் குதித்து மாமியாரைப் படகில் ஏற்றிக்கொண்டு முதல் உதவி செய்து கரைக்கு கூட்டி வந்தார்.
மறுநாள் காலையில் எழுந்து வாசல் தெளிக்கும் சமயம் வாசலில் மாமியாரை காப்பாற்றிய மருமகனுக்கு மாமியாரின் அன்பு பரிசு! என்று ஸ்டிக்கர் எழுதி புத்தம் புதிய மாருதி 800 கார் நின்று கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு இரண்டாவதாக இருக்கும் மருமகனை மாமியார் அதேபோல் அழைக்க விவரம் தெரியாத மருமகனும் அதுபோலவே மாமியாரை ஏரியில் படகில் அழைத்துச் சென்றார்.
நடு ஏரியில் செல்லும் சமயம் வழக்கம் போல மாமியார் சின்னதாக டான்ஸ் ஆடி ஏரியில் விழுந்து விட்டார். மருமகனும் உடனே பதறிப்போய் ஏரியில் குதித்து மாமியாரை தாங்கி தூக்கி பிடித்து படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்.
மறுநாள் காலையில் மருமகன் எழுந்து வாசல் தெளிக்க வந்து பார்க்கும் சமயம் மாமியாரை காப்பாற்றிய மருமகனுக்கு மாமியாரின் அன்பு பரிசு! என்று ரெனால்ட் க்விட் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது
இரண்டு நாட்களுக்கு பின்னர் கடைசி மருமகனுக்கு சோதனை! அதேபோல மருமகன் ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயம் கடைசி மருமகன் ரொம்ப யூத் என்பதால் மாமியார் சற்றே அதிக சந்தோசமாகவே நடனமாடி ஏரியில் விழுந்து விட்டார்.
மருமகன் கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். மாமியார் காப்பாற்றுங்க மாப்பிள்ளை! காப்பாற்றுங்க மாப்பிள்ளை! என்று கத்தியும்,கதறியும் மருமகன் ஒன்றும் செய்யவில்லை.
பிள்ளையா பெத்து வளர்த்து வச்சுருக்குறே?என்றவாறு கடுப்பில் அமர்ந்துவிட்டார்.சிறிது நேரம் கழித்து மாமியார் அடங்கியதும் மாமியாரை படகில் எடுத்துப் போட்டுக் கொண்டு கரை வந்து சேர்ந்து விட்டார்.
மறுநாள் காரியம் முடிந்தது. மூன்றாம் நாள் காலை கதவு திறந்து பார்த்ததும் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள புகாட்டி கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது எனதருமை இன்னுயிர் மருமகனுக்கு மாமனாரின் அன்பு பரிசு! என்று எழுதி இருந்தது