மலச்சிக்கலுக்கு எளிய உணவு வைத்தியம்
சுட்டுவிரல் நீளம் இஞ்சியைத் தோல்சீவி, அதை நைய அரைத்து சாறெடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐம்பது, அறுபது மில்லி வெந்நீர் விட்டு, கூடவே கட்டிப் பால்பெருங்காயத்தை ஒரு இஞ்ச் அளவு எடுத்து வறுத்து நன்கு தூளாக்கி அதையும் கலந்து கொள்ளுங்கள் இக்கலவையை காலை ஒரு வேளை, இரவு ஒரு ஒருவேளை உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளுங்கள். காலையில் வயிறு கலகல வென்று சுத்தம் ஆகும்.
இதை வாரத்தில் மூன்று நாள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் மட்டும் " ஒரேஒரு கல் உப்பு" மட்டும் சேர்த்து அருந்துங்கள். ( இஞ்சி காரம் என்று நினைத்தால்..)