·   ·  541 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 5.11.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். மற்றவர்களின் தலையீடுகளை குடும்பத்தில் குறைத்துக் கொள்ளவும். வியாபார பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நற்பெயரை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல ம்

 

மிதுனம்

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் கைகூடும். அதிரடியான சில செயல்பாடுகள் மூலம் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பணி நிமித்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூக பணிகளில் அலைச்சல் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

சிம்மம்

எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேக நலனில் கவனம் வேண்டும். புதிய பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நற்பெயர் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்

 

கன்னி

திடீர் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிலும் கோபம் இன்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது விரயங்களை தவிர்க்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

துலாம்

வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் அறிமுகங்கள் அதிகரிக்கும். சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். திறமைகள் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

விருச்சிகம்

சிறு தூர பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த சஞ்சலம் மறையும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

உடன் இருப்பவர்களின் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

குடும்பத்தாரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உறவுகளிடம் எதிர்பார்த்து உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடு குறித்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அதிரடியான சில செயல்கள் மூலம் புதுமையான வாய்ப்புகள் அமையும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பாடங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன ம்

 

மீனம்

சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். செலவுகளை குறைப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரைகுறையாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த தடுமாற்றம் விலகும். வியாபாரத்தில் இழந்த வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

  • 437
  • More
Comments (0)
Login or Join to comment.