·   ·  1574 posts
  •  ·  0 friends

மூன்று வேளை உணவு உண்ண உகந்த நேரம்

காலை உணவு

உண்ண சரியான நேரம் - 7 - 8 a.m.

உண்ண கூடாத நேரம் - காலை 11 மணிக்கு பிறகு.

காலையில் உண்ணும் முதல் ஆகாரம் உடலுக்கு மிகவும் அவசியம். காலை உணவு நம் மூளைக்கும் உடலுக்கும் சக்தியை கொடுக்கிறது. நம் அன்றய வேலைக்கான அனைத்து சக்திகளுக்கும் ஆதாரம் காலை உணவு அதனால் அதை என்றும் தவிர்க்காதீர்கள்.

மதிய உணவு

உண்ண சரியான நேரம் - மதியம் 12 - 2 மணி வரை!

உண்ண கூடாத நேரம் - 3 மணிக்கு பிறகு.

மத்திய உணவு காலை உணவு உண்ட 4 மணி நேரத்திற்கு பிறகு உண்பது உகந்தது.

அது நம் உடலின் உள்ள சர்க்கரை அளவை சமவிகிதத்தில் வைக்க உள்ளது. மேலும் நம் பசியை அதிகப்படுத்தாமல் வைக்க உள்ளது.

இரவு உணவு

உண்ண உகந்த நேரம் - 6 - 8 இரவு மணி

உண்ண கூடாத நேரம் - இரவு 9 மணிக்கு பிறகு !!!

இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு சாப்பிடுவது மிகவும் நன்று. கலோரி சரியாக எரியூட்டுவதற்க்கும் உறக்கம் நன்றாக வருவதற்கும் இது நன்கு உதவும்.

  • 55
  • More
Comments (0)
Login or Join to comment.