·   ·  1809 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 23.8.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். தொல்லை தந்த வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

ரிஷபம்: இங்கிதமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். கருத்துமோதல் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்: உங்களின் ஆளுமைத் திறன் கூடும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பங்கள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். சின்னச்சின்ன பிரச்சினைகள் தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

விருச்சிகம்: புது எண்ணங்கள் தோன்றும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். இழுபறியான காரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் புதிய பதவிக்கான போட்டி குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துகளை ஏற்று நடப்பது நல்லது. போட்ட முதல் இரட்டிப்பாகும்.

தனுசு: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் வந்து போகும். எதிலும் நிதானமாக செயல்படவும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரரை அனுசரித்து நடப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.

மகரம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். பணவரவு திருப்தி தரும். செலவுகளும் தொடரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

மீனம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

  • 32
  • More
Comments (0)
Login or Join to comment.