இன்றைய ராசி பலன்கள் - 24.9.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மன உறுதி அதிகரிக்கும். வியாபாரத்தில் உற்சாகம் பிறக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். தடையாக இருந்தவர்களின் இன்னல்கள் நீங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கோப்புகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கடகம்
திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். சொத்து விற்பது வாங்குவதில் லாபமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். பணி நிமித்தமான உதவிகள் கிடைக்கும். பக்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கன்னி
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். தன வரவுகள் திருப்தியாக அமையும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். எதிலும் நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடலாம். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் ஆர்வமின்மையான சூழல் அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
தனுசு
வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ரகசியமான சில செயல்கள் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வுகள் விலகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
மருத்துவத் துறைகளில் சாதகமான சூழல் அமையும். தொழில் நிமித்தமாக மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் மேம்படும். மனதளவில் இருந்த அமைதியின்மை குறையும். தன வரவுகளை மேம்படுத்துவதற்கான சூழல்கள் அமையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கும்பம்
சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்களால் விரயம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செயல்களை செய்வது நல்லது. வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாகன மாற்றங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு