
மாதுளை தரும் பலன்கள்
தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும். தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும். இத்தனை சத்துக்கள் நிறைந்த மாதுளம்பழத்தின் முத்துக்களை தினமும் ஒரு கைப்பிடியாவது சாப்பிடுங்கள்.
மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு... 'சைனீஸ் ஆப்பிள்'. பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான் உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும்
மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்டது பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை உடையது. உடலில் நைட்ரிக் ஆக்சைட் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.
நொறுக்குத் தீனிகள் வாங்கி சாப்பிட்டு உடல் உபாதைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு பதிலாக நல்ல பழங்களை வாங்கி சாப்பிட்டு உடலை பேணி காக்கலாம்.