·   ·  448 posts
  •  ·  0 friends

மன்னனுக்கு வந்த சந்தேகம்

ஒரு நாட்டின் மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அறிவாளிகள் கூட சில சமயம் ஏமாந்து போய்விடுகிறார்களே, எதனால்?- ங்கிறது தான் அந்த சந்தேகம்.

இந்த சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு தன்னோட நாட்டுல பாதியை பரிசளிப்பதா மன்னன் அறிவிச்சான்.

அவனுடைய சந்தேகத்தை தீர்க்க யாரும் முன்வரவில்லை. ரொம்ப நாள் கழிச்சு, ஒரு நாள் வாலிபன் ஒருத்தன், மன்னர்கிட்ட வந்து தனியா பேச விரும்பினான்.

அரசனும் அவனை தனிமையில சந்திச்சாரு..

அப்போ வாலிபன் அரசே... நான் உங்கள் அண்டை நாட்டு மன்னனின் அந்தரங்கச் செயலாளன். இது வரை நீங்கள் அவரை வெல்ல பல முறை முயன்றும், முடியாமல் போயிற்று. நாளை எங்கள் மன்னர் மாறுவேடத்தில் உங்கள் நாட்டு பக்கம் உள்ள காட்டின் மத்தியில் இருக்கும் ஆலயத்திற்கு பூஜை செய்ய வருகிறார். நீங்களும் மாறுவேடமிட்டு, ஒரு நான்கைந்து மெய்க்காவலர்களுடன் வந்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கைது செய்யலாம். நான் இப்படி துரோகியாக மாறியதற்கு காரணமே, எங்கள் மன்னர் என் உடன் பிறந்த சகோதரனை செய்யாத குற்றத்திற்காக அநியாயமாக மரண தண்டனை கொடுத்து விட்டார். இதனால் என் குடும்பம் சிதறிப் போய் விட்டது. அதற்கு பழி வாங்கவே இப்படி செய்கிறேன்னு சொல்ல,

மறு நாள் அரசன் அந்த வாலிபனுடன் மாறுவேடத்தில் சில மெய்க்காப்பாளர்களோட காட்டுக்குள்ள போனான்.

காட்டில் மத்திய பகுதிக்கு போன பிறகு எதிர்பாராம மெய்க்காவலர்களை விட்டு மன்னரும் வாலிபனும் மட்டுமே வழி மாறி வந்துட்டாங்க.

அப்ப திடீர்னு நாலஞ்சு பேர் ஆயுதங்களோட மன்னரை சூழ்ந்துட்டாங்க.

வாலிபனை பார்த்து மன்னன் இது என்ன துரோகம்? னு கத்த..

வாலிபன் சிரிச்சுக்கிட்டே மன்னரே... நான் உங்கள் குடிமகன்.. மாபெரும் மேதைகளும் கூட இப்படித்தான் ஆசையிலும் அவசரத்திலும் எதிர்பாராமல் ஏமாந்து போனார்கள்னு சொல்ல...

மன்னருக்கு தான் அறிவிச்ச போட்டி ஞாபகத்துக்கு வந்தது. வாலிபனுக்கு போட்டியில் அறிவித்த படி பாதி நாட்டை பரிசளிச்சாராம்.

  • 180
  • More
Comments (0)
Login or Join to comment.