- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 9.5.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அரசு பணியில் துரிதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வியாபார நிமித்தமான பயணம் உண்டாகும். பூர்விக சொத்துக்கள் செயல்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல்கள் உருவாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மற்றும் பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பொதுமக்கள் பணிகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கடகம்
தள்ளிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் உண்டாகும். அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
அலுவலக பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் காணப்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கன்னி
குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடல் அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார நிமித்தமான உதவிகள் சாதகமாக அமையும். பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். இழுபறியான ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான உயர்வுக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்களில் தெளிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
எதிலும் ஆர்வமும், இனிமையான சூழலும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். சக பணியாளர்களின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகமான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்