·   ·  641 posts
  •  ·  0 friends

அண்ணாச்சி சொன்ன வைத்தியம்

ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினை... நெட்ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விஷயத்தைச் சொன்னான்.

"டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். கீழே எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "

டாக்டரு சொன்னாரு.. "தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒருதரம் வீதம் அஞ்சு செஷன் என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்" .

"ரொம்பத் தேங்ஸ் டாக்டர்.

எவ்வளவு பீஸ்?"

" ஓரு செஷனுக்கு 2000 ரூபாய் தான் தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுரை ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000 சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500 ரூபாய் . "

" ஓ அப்டீங்களா? சரிங்க

டாக்டர் ஐயா. வர்றேன். "

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டர் அவனைப் பாக்கறாரு.

" அடடே என்னா தம்பி,

அப்புறம் வரவே இல்லே? "

"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."

" ஓ.. அப்டியா, எப்படி சரியாச்சி? "

" நம்ம அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம்."

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு. " என்ன தம்பி சொல்றீங்க?

வெவரமா சொல்லுங்க "

" அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்கன்னாரு.. அப்புடியே கட்டிலை 2000க்கு வித்துட்டு 200ரூபாய்க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே.

டாக்டர்: 😳😳😳😳

  • 23
  • More
Comments (0)
Login or Join to comment.