·   ·  659 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 2.12.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

ரிஷபம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும் வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் ஏற்படும். பணியில் இருந்த பொறுப்புகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதார மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். நன்மை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

சிம்மம்

தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒரு விதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். கணித தொடர்பான துறைகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

 

தனுசு

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வருவாயை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

 

மகரம்

மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சரிவை சரி செய்வதற்கான சூழல்கள் உண்டாக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

கும்பம்

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மீனம்

குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 37
  • More
Comments (0)
Login or Join to comment.