- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 20.8.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரலாம். வியாபாரத்தில் குழப்பங்களை தீர்க்க வழி கிட்டும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல் உண்டு.
ரிஷபம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கையில் பணம் புரளும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். லாபமுண்டு.
கடகம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.
சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் விவாதங்களைத் தவித்துவிடவும்.
கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
துலாம்: முன்கோபம் விலகும். தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களுடன் விவாதங்கள் வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். திட்டமிட்ட பணிகளை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் முடிவு எடுப்பதில் அவசரம் கூடாது. அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
தனுசு: பணவரவு உண்டு. பெற்றோரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: பூர்வீக வீடு, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பீர். நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.