·   ·  345 posts
  •  ·  0 friends

பெர்னாட் ஷா

சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட்லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர்.

கீழே விழுந்ததனால் பெற்ற காயங்கள் மோசமானதால் ஏற்பட்ட நாள்பட்ட சிக்கல்களால் பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார்.

இலக்கியத்திற்கான நோபல்பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இன்றுவரை இவர் ஒருவரே.

அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார். பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது மனைவியின் வேண்டுகோள்படி ஏற்றுக்கொண்டார்: அவரது மனைவி அதை அயர்லாந்துக்கு கௌரவம் எனக் கருதினார். பரிசுத் தொகையை அவர் நிராகரித்து அதை ஸ்வீடிஷ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான நிதியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கோரினார்.

  • 100
  • More
Comments (0)
Login or Join to comment.