·   ·  1083 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 23.2.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் குறையும். தொழிலில் புதிய கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

ரிஷபம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சாதுரியமான செயல்பாடுகள் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்புகள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி உருவாகும். சுப காரியங்களில் இருந்த இடையூறுகள் விலகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கடகம்

வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு புகழ் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

சிம்மம்

கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடத்தில் கோபப்படுவதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களைப் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. திடீர் முடிவுகளை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பொது மக்கள் பணியில் ஆதாயம் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

துலாம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். கடந்த கால நிகழ்வுகளை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். முயற்சிக்கு உண்டான ஊதியம் கிடைக்கும். புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

தனுசு

எதிர்பார்த்த சில பணிகள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகரம்

மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறுதூர பயணம் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் பிறக்கும். தடைப்பட்டு போன சில காரியங்கள் திடீரென்று நடைபெறும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் கனிவு வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

சமூகப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செய்லபடவும். தம்பதிகளுக்குள் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். எதிர்காலம் குறித்த ஒருவிதமான குழப்பம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 36
  • More
Comments (0)
Login or Join to comment.