·   ·  498 posts
  •  ·  0 friends

காய்ச்சல் வந்தால்.....

காய்ச்சல் நம் செல்களில் உள்ள கழிவுகளை அளிக்க உடல் உருவாக்கும் எதிர்ப்பு சக்தியின் அணு ஆயுதம்.

பெரும்பாலான நபர்கள்,அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் ஏதோ ஒரு ஆங்கில மருந்து உதாரணத்திற்கு பாராசிட்டமால் எடுத்துக்கொண்டு அவர்களது காய்ச்சலை கட்டுப்படுத்திக் கொண்டு நடைமுறை வாழ்க்கையை தொடர்வார்கள்.

நாம் ஏன் நமக்கு காய்ச்சல் ஏற்படுகிறது?காய்ச்சல் பின்னாடி உள்ள விஞ்ஞானம் என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கருதுவதில்லை.

காரணம் அது ஒரு நோய்.நோய் பற்றி மருத்துவர்கள் தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நான் ஒரு சாமானியன். நான் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ,அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உட்கொண்டு வாழ வேண்டும். இதுதான் பெரும்பாலானவர்களின் மனநிலை.

பாராசிட்டமில் மாத்திரை வந்து பல வருடங்கள் ஆன பிறகு இன்று ஆய்வுகளில் சொல்கிறார்கள் கர்ப்பிணிகள் பாராசிட்டமில் எடுத்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படும் என்று.

சரி மாத்திரை மருந்துகளை விடுங்கள் அவை நம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் என்று ஆங்கில மருத்துவர்களே கூறுகிறார்கள்.அதை நாம் விட்டு விடலாம்.

காய்ச்சல் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொள்ளலாம். காய்ச்சல் நம் உடலில் இருக்கும் பொழுது நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் பின்வருமாறு ,

1. நம் உடலின் வெப்பநிலை மிகவும் அதிகமாகிறது.

2. பசி ஏற்படவில்லை. நாக்கும் கசக்கிறது

3. யாரோ என்னை அடித்த மாதிரி உடல் வலிக்கிறது,உடலை நகற்ற முடியவில்லை.

உடலின் வெப்பநிலை அதிகரிப்புக்கு பின்னால் உள்ள அறிவியல் :

நமக்கு ஏன் வேர்வை ஏற்படுகிறது என்று சிந்தித்துள்ளீர்களா ? வியர்வை ஏற்படும் போது எப்படி சிந்திக்க முடியும்? வெறுப்புதான் வருகிறது என்று உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

நம் உடலின் உள் வெப்பநிலை 36.5°C - 40°C என்ற வரையறைக்குள் இருக்க வேண்டும்.நம் உடலின் உள் வெப்பநிலை 40 டிகிரிக்கும் அதிகமாகும் பொழுது நம் உடல் வேர்வை உருவாக்கி தன்னை குளிர்வித்து தன் வெப்பநிலையை சமநிலைக்கு கொண்டு வருகிறது.

அதே மாதிரி உடலின் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்க்கு குறையும் பொழுது நம் உடல் வெப்பத்தை உண்டாக்கி உடலின் வெப்ப சமநிலையை பராமரிக்கிறது.

உதாரணத்திற்கு உடலின் வெப்பநிலை 36 டிகிரிக்கும் குறைவாகி கொண்டிருக்கிறது. உடல் வெப்பத்தை உருவாக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இங்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? நம்முடைய உள்ளுறுப்புகள் இயக்கம் குறைந்து கடைசியில் உள்ளுறுப்புகள் இறந்துவிடும்.

அதாவது அந்த மனிதன் இறந்து விடுவான். இங்கு உடல் உருவாக்கம் வெப்பம் நம்மை நிச்சயமாக மரணத்திலிருந்து காக்கிறது. உயிர் வாழ வைக்கிறது. இந்த வெப்பத்தை நம் உடல் தான் உருவாக்குகிறது. இதே உடல் தான் காய்ச்சல் உண்டாகும் பொழுது நம் உடலில் வெப்பத்தை அதிகரிக்கிறது.ஆக காய்ச்சல் உண்டாகும் பொழுது நம் உடலில் வெப்பம் அதிகரிப்பது சரியான செயல்முறை. நம் செல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதீத வெப்பம் அவசியம்.

காய்ச்சல் ஏற்படும் பொழுது பசி ஏற்படாததற்கு பின்னால் உள்ள அறிவியல் :

நோயற்ற உடலில் மட்டுமே நல்ல பசி உண்டாகும். உடல் காய்ச்சலில் இருக்க, காய்ச்சலுக்கு தேவையான வெப்பத்தை உண்டாக்குவதற்கு செரிமான ஆற்றலையும் உடல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பசி காய்ச்சல் விடும் வரை ஏற்பட வாய்ப்பில்லை. இதை மீறியும் உண்ணும் பொழுது நம் உடல் நம் நாக்கில் கசப்பு சுவையை உண்டாக்கும். கசப்பு சுவையை உண்டாக்குவது மூலம் நம் உடல் உணவை நிராகரிக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் சோர்விற்கு பின்னால் உள்ள அறிவியல்:

காய்ச்சல் நம் உடலின் இயக்க சக்தியையும் பயன்படுத்திக் கொள்ளும்.அதனால் உடல் இயல்பாக இயங்கும் சூழல் இருக்காது. தசைகளில் உள்ள சோர்வு,வாய்வு வெளியேறும் பொழுது வலி ஏற்படும். இத்தருணத்தில் நாம் உடலுக்கு முழு ஓய்வு தருவது மட்டுமே சிறந்த செயல். ஜுரம் முடிந்த பிறகு நமது தசை மற்றும் நரம்பு மண்டலங்கள் புத்துயிர் பெறுகின்றன.

எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை ஆழமாக புரிந்து கொள்ள இந்த பதிவை பாருங்கள்,

எதிர்ப்புசக்தியின்முக்கியத்துவம்

நம் உடலில் ஜுரம் இருக்க நமது செல்களில் உள்ள கழிவுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு கொண்டே இருக்கின்றன. இங்கு கஷ்டம் இருக்கத்தான் செய்யும். No pain No gain என்ற பழமொழி இங்கு பொருந்தும்.

இன்னும் ஜுரத்தை எளிமையாக புரிந்து கொள்ள நாம் ஓட்டும் இரு சக்கர வாகனத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் விடும் பொழுது வாகனத்தை ஓட்ட முடியுமா? பெட்ரோல் போட முடியுமா?நிச்சயமாக முடியாது.

சர்வீஸ் முடிந்த பிறகு வாகனம் இன்னும் சிறப்பாக செயல்படும்.அது போலவே ஜுரம் என்பது நம் உடலுக்கு ஒரு சர்வீஸ். இந்த ஜுரம் என்ற சர்வீஸ் நடைபெறும் பொழுது உணவு உள்ளே செல்லாது,.உடல் இயக்கமான நடை,அசைவுகள் கடினமாக இயலாததாக இருக்கும். இந்த ஜுரம் என்ற சர்வீஸ் முடிந்த பிறகு நம் முழு உடலும் புத்துயிர் பெறும்.

காய்ச்சலை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் நபர்களுக்கு புற்றுநோய் வரும் சாத்தியக்கூறு கிடையாது. செல்களில் உள்ள கழிவுகளே வருங்காலத்தில் புற்று நோயாக மாறும் சாத்தியம் உண்டு.

சரி காய்ச்சல் பற்றி நாம் அறிந்து கொண்டோம்.

மாத்திரை மருந்து இன்றி காய்ச்சலை எவ்வாறு எதிர்கொள்வது?

நம் நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு மரபு வழி மருத்துவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அக்குபங்சர்,ஹோமியோபதி,சித்தா,ஆயுர்வேதா போன்ற ஆங்கில மருந்துகள் பயன்படுத்தாத மருத்துவ முறையை தேர்ந்தெடுத்துக் கொண்டு காய்ச்சலை அணுகுங்கள். காய்ச்சலின் முழு பலனை நாம் பெற்று பயன் பெறுவோம்.

  • 688
  • More
Comments (0)
Login or Join to comment.