
இன்றைய ராசி பலன்கள் - 9.8.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி காண முயற்சிகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து குழப்பங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். போட்டி தேர்வுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். மறைமுகமான தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்த எண்ணம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் மறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா
மிதுனம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். நண்பர்கள் பற்றிய சில புரிதல் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்களில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
சிக்கலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். உணவு விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தோற்ற பொழிவில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
பூர்வீக சொத்து விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். மறைமுகப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகி தெளிவுகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சூழல்கள் மாறும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். வியாபார விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகன எண்ணம் ஈடேறும். உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கருத்துக்கு ஆதரவுகள் பெருகும். வேலையாட்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். அச்சம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
மனதளவில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் கோபங்கள் மேம்படும். புதிய முதலீடுகளில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய நபர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
தம்பதிகளுக்கு சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் உருவாகும். வெளிவட்டத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். மேல் அதிகாரிகளுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். விருப்பமான சில பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கும் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு