நல்லது செய்ய நினைத்த அப்பாவி கணவன்
புதியதாக திருமணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ திடீரென ஒரு நாய் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது.
தங்கள் இருவரையும் கடிக்கப் போகிறது என தம்பதிகள் நினைத்தார்கள். மனைவி பயந்து நடுங்கினாள்.. ஆனால் நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி கொண்டார். நாய் கடித்தால் தன்னை மட்டும் கடிக்கட்டும். தன் மனைவி தப்பி விடுவாள் என நினைத்தார்.
ஓடிவந்த நாய் வேறு திசையில் ஓடிச் சென்றது. நிம்மதியான கணவன் பிறகு மனைவியை இறக்கி விட்டார்.
தன்னுடைய நற்செயலுக்காக தன்னுடைய புது மனைவி தன்னை பாராட்டுவாள் என எதிர்பார்த்தார். அடுத்த கணமே மனைவி கோபமாக, "எல்லோரும் நாய் வந்தால் கல்லைத் தூக்கி எறிவார்கள்.... ஆனால் தன் மனைவியையே தூக்கி நாய் மேல் எறியும் கணவனை இப்போதுதான் நான் பார்க்கிறேன்" என்றாள்.
-------
நீதி: இப்படிதான் பல அப்பாவி கணவன்மார்கள் நல்லது செய்யப்போய் கெட்ட பேர் வாங்குகிறார்கள்...!