
சளியை வெளியேற்ற சில அறிவுரைகள்
மஞ்சள், மாதுளம் பழச்சாறு போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் நாட்டுச் சர்க்கரை, வெள்ளம், கருப்பட்டி,தேன் கலக்கலாம்.இதை, முற்பகல், 11:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.
இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு, தண்ணீரை கொதிக்க வைத்து, தொடர்ந்து பருகி வரலாம்.
பூண்டை, பச்சையாக உட்கொள்ளலாம்.இரண்டு பூண்டு பற்களை பொடியாக வெட்டி, ஒரு டம்ளர் நீருடன் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
தேங்காய் எண்ணையுடன் கற்பூரம் கலந்து சூடாக்கி மார்பு மீது தடவினால் சளி, இருமல் குறையும். மூக்கடைப்பு ஏற்பட்டால், சுடுநீரில் உப்பு கலந்து, சுத்தமான பருத்தி துணியில் தொட்டு துடைக்கலாம். இவை, குழந்தைகளுக்கு உகந்த முறைகள்.
ஏலக்காய் பொடியுடன், நெய் கலந்து சாப்பிட, மார்பு சளி நீங்கும்.
வல்லாரை சூரணத்தை, தேன் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் நீங்கும்.
சின்ன வெங்காயசாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவில் கலந்து தினமும், ஒருவேளை என இரண்டு நாட்கள் சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கும்.