·   ·  1264 posts
  •  ·  0 friends

தர்ப்பூசணி பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

1. சீராக வளர்ந்துள்ள தர்ப்பூசணியை தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அந்த பழம் முழுவதும் கதிரவனின் ஒளி மற்றும் ஊட்டச்சத்து சீராக இருக்கும்.

2. கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள இரு பழங்களை கையில் தூக்கிப்பாருங்கள். எடை அதிகமுள்ள பழம் நீர்ச்சத்து மற்றும் சுவை மிகுந்தது (பழங்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்க வேண்டும்).

3. பழத்தின் ஒரு பகுதியில் மஞ்சள் நிற திட்டு இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இடம் அந்த பழம் மண்ணில் நீண்ட நேரம் இருந்ததற்கான அடையாளம். நல்ல மஞ்சள் நிறத்தில் திட்டு இருந்தால் அது சரியான காலம் வரை செடியில் இருந்துள்ளது. கதிரவனின் ஒளியும் ஊட்டச்சத்தும் அதற்கு சுவையை அளித்திருக்கும். மாறாக, வெள்ளை நிற திட்டு இருந்தாலோ, அல்லது திட்டுகளே இல்லையென்றாலோ, அந்த பழம் தகுந்த காலத்திற்கு முன்னமேயே பறிக்கப்பட்டு விட்டது என்று பொருள். எனவே, சுவை குறைந்ததாக இருக்கும்.

4. அந்த பழத்தின் நிறம்: நன்றாக பழுத்த பழத்தில் கரும்பச்சை கோடுகள் இருக்கும். மேலும் அவற்றின் வெளித்தோல் மின்னாது.

5. தட்டிப் பார்ப்பது: இது பழக்கத்தில் தான் வரும் என்று இந்த வலைத்தளம் கூறுகிறது. எனவே, இதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நான் வாங்கும் பொழுது முதல் நான்கு விஷயங்களை நன்றாக கவனித்து வாங்குவது வழக்கம்.

  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.