
இன்றைய ராசி பலன்கள் - 10.9.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வரவு செலவில் விவேகத்துடன் செயல்படவும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். ஜாமின் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வியாபார செயல்களில் சிந்தித்து செயல்படவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
ரிஷபம்
மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். அணுகு முறையில் சில மாற்றம் காணப்படும். திட்டமிட்ட காரியம் நடைபெறும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கடகம்
கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது விரயங்களை தவிர்க்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் இன்மை ஏற்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சக பணியாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதார தொடர்பான சிக்கல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணம் மேம்படும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு சில மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் சுயரூபம் வெளிப்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் திருப்தியை தரும். உத்தியோகத்தில் இருந்த பதற்றமான சூழல்கள் மறையும். புதிய கனவுகள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கும்பம்
எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆக்கப்பூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மறைமுக தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். வீடு மாற்றம் சார்ந்த எண்ணம் மேம்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்