முகத்தில் இருக்கிற கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் போக்க வேண்டுமா ?
வீடு சென்று வெளியே திரும்பும் போது முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் ஒட்டிக்கொள்வதோடு பருக்களை உண்டாக்குகிறது.
எவ்வளவு தான் கடைகளில் விற்கும் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும்போதிய அளவில் தீர்வு கிடைப்பதில்லை .அப்படியே தீர்வு கிடைத்தாலும் நமது முகத்தில் இருக்கும் தசைப்பகுதிகள் மென்மை தன்மையை இழந்துவிடுகிறது இதனால் எப்போதும் முகம் இறுக்கத்துடன் காணப்படுகிறது. அப்பழுக்கற்ற சருமத்தை பெற சில எளிய வழி முறைகள் உங்களுக்காக.....
பருக்களை கண்டவுடன் நாம் அதனை கிள்ளத் தொடங்குகிறோம் நாளடைவில் அது கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு அசிங்கமாகவும் தெரிகிறது. வெளியே செல்லும் பலரும் தங்களது தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர் எனவே தன்னம்பிக்கைக்கு அழகு என்பது மிகப்பெரிய தேவையாக அமைகிறது.
ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்:
ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை மிகச் சிறந்த ஒன்றாகும்.இதனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யும் போது அதிக பலனை நாம் பெறலாம்.இதனை ஆண் பெண் என இருபாளறும் பயன்படுத்தலாம்.அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.
பொதுவாகவே நாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் மென்மயாக காணப்படும். அதிலும் குறிப்பாக ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒன்றாக கலந்து அக் கலவையை இரவில் படுக்கும் முன்பு நன்கு மசாஜ் செய்து காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று முறை அல்லது தினம் தோறும் கூட பின்பற்றலாம்.
இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு புதிய செல்கள் உற்பத்தியாகின்றன.மேலும் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயில் அதிக அளவு ஆன்டி ஆக்சைடு மற்றும் சருமத்திற்கு தேவையான இரும்புத் சத்து, மக்னீியம் போன்ற சத்துகள் நிறந்துள்ளன.
இந்த செயல் முறையை நாள் தோறும் பின்பற்றுவதால் முகம் ஈரப்பதத்துடனும், வழவழப் பாகவும் ,பொலிவோடும் காணப்படுகிறது. தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைகின்றன.பருக்களை கொண்ட சருமத்திற்கு இந்த கலவை ஏற்றதாகும்.