·   ·  174 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 30.8.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உடன் பிறந்தவரிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். அக்கப்பக்கம் இருப்பவர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மிதுனம்

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை ஏற்படும். அரசு விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கடகம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

கல்வியில் இருந்த ஆர்வம் இன்மை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பொறுப்புகள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் இருக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கன்னி

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப காரிய தொடர்பான முயற்சிகள் கைகூடும். இழுபரியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு எழுத்துத் திறமை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் உருவாகும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

துலாம்

உடனிருப்பவர்கள் கூறும் கருத்துக்களில் உண்மையை அறிந்து முடிவெடுப்பது நல்லது. நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

விருச்சிகம்

தன வரவுகளில் இழுபறியான சூழ்நிலைகள் அமையும். பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சில பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கல்வி பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

ஒரு சில விஷயங்களால் மனதில் குழப்பங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நினைத்த பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

 

கும்பம்

விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் புது விதமான மாற்றங்கள் ஏற்படும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். யூக விளையாட்டுகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் மதிப்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மீனம்

ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். அலுவலகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இழுப்பறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 552
  • More
Comments (0)
Login or Join to comment.