பயன் தரும் பாசிப்பயறு
சின்னம்மை, பெரிய அம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிறு ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போன்று காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில்
பாசிப்பயிறு சிறந்த மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.
மனத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டால் வெயில் கால உஷ்ணக்கோளாறுகள் குணமடையும். குறிப்பபாக ஆசனவாய் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு. இது சிறந்த பருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் வைத்து சாப்பிட்டால் பித்தமும் மலச்சிக்கலும் குணமாகும்.
பாசிபருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து
உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்..
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பாசிப்பயிறு மாவு தேய்த்து குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சிகைக்காய்ப்போல தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லை போகும்.