
இன்றைய ராசி பலன்கள் - 7.8.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். முத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அலுவலகத்தில் மதிப்புகள் கூடும். மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். தன வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சாதனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் சில மாற்றம் உண்டாகும். பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கன்னி
எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். சில பணிகளை சூழ்நிலை அறிந்து மேற்கொள்ளவும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பண விஷயங்களில் ஏற்ற இறக்கம் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. இயந்திரப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். தெய்வீக காரியங்களில் மனம் ஈடுபடும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
பயனற்ற செலவுகளை குறைக்கவும். திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கும்பம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். பணி சார்ந்த செயல்களில் புரிதல்கள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். வாகன பழுதைகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்து பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். சாந்தம் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை