
இன்றைய ராசி பலன்கள் - 20.9.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாறுபட்ட சூழல்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல்கள் மறையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். தோற்றப்பொழிவில் சில மாற்றங்கள் காணப்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். கொடுக்கல் வாங்கலில் உயர்வு உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பழைய சிக்கல்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். பணிகளில் விரைந்து முடிப்பீர்கள். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த காரியத்தில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சூழல்கள் உருவாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். முயற்சிக்குண்டான பலன்கள் கிடைக்கும். சில வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
துலாம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு செயல்களில் இருந்த இழுபறிகள் குறையும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புது விதமான அனுபவங்கள் உருவாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
தனுசு
மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மைகள் படிப்படியாக குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். உணவு செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தடைபட்ட தன வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் புதிய சூழ்நிலைகள் உருவாகும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
மனதளவில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சிகள் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்ட பணிகள் சாதகமாக முடியும். ஆக்கப்பூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்