·   ·  585 posts
  •  ·  0 friends

பெண்களுக்கான சமையலறை டிப்ஸ்....

  • பல வீடுகளில் அரிசியை மாதக்கணக்காக சேமித்து வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
  • சேமித்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு மற்றும் மாவு போன்றவற்றில் சிறு சிறு பூச்சிகள் மற்றும் புழுக்கள் வரலாம்.
  • எந்த ஒரு கெமிக்கல்களையும் பயன்படுத்தாமல் அரிசியை பாதுகாப்பதற்கு சில பாரம்பரிய முறைகள் பின்பற்றலாம்.
  • உலர்ந்த வேப்பிலையை அரைத்து, சிறு உருண்டையாக கட்டி அரிசியின் நடுவில் வைக்கவும். இது பூச்சிகளைத் தடுக்கும்
  • ஒரு சுத்தமான துணி அல்லது பெரிய ஒரு டிரே எடுத்து அரிசியை நன்றாக பரப்பி நேரடி சூரிய வெளிச்சத்தில் 2 முதல் 3 மணி நேரம் வைக்கவும்.
  • பூச்சிகளால் ஈரமான சூழலில் மட்டுமே வாழ முடியும். எனவே இந்த செயல்முறை அரிசியை உலர்த்தி மீண்டும் பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளும்.
  • அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தின் மேற்புறம் அல்லது அடிப்பகுதியில் கல் உப்பை போடவும். உப்பானது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி தானியங்களை உலர்ந்த நிலையிலும், பூச்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
  • 2 அல்லது 3 பிரியாணி இலைகளை அரிசி இருக்கும் பாத்திரத்தில் போடலாம். இதே முறையை நீங்கள் பருப்பு மற்றும் மாவிற்கும் பயன்படுத்தலாம்.
  • கிராம்பு வாசனைக்கும் பூச்சி வராது.
  • தோல் உரிக்காத 5 - 6 பூண்டு பற்களை அரிசி இருக்கும் பாத்திரத்தில் போடவும். இதிலிருந்து வரும் வாசனை பூச்சிகளை விரட்டும். அரிசி உலர்ந்த பிறகு புதிதாக வேறு பூண்டை மாற்றுவதன் மூலமாக தொடர்ந்து அரிசியை நீங்கள் பாதுகாத்து வரலாம்.
  • 528
  • More
Comments (0)
Login or Join to comment.