·   ·  1748 posts
  •  ·  0 friends

வித்தியாசமான வழக்கம்

உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூரில் உள்ள ராஸ் மண்டல் ஜெகந்நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வித்தியாசமான வழக்கம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தக் கோவிலில், வருடாந்திர தேரோட்டத் திருவிழாவிற்கு முன்பாக, சுமார் 10 மருத்துவர்கள் ஜெகந்நாதர் மற்றும் பிற தெய்வச் சிலைகளுக்கு ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்தக் கருவி (BP), தெர்மாமீட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி ‘உடல்நல பரிசோதனை’ செய்வது, பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கோவில் மரபாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கத்தின்படி, தேரோட்டத்திற்கு முன் தெய்வங்களுக்கு 108 குடம் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வளவு நீரைத் தலையின் மீது ஊற்றுவதால், தெய்வத்திற்கு காய்ச்சல் ஏற்பட்டதாக ஐதீகம் கூறுகிறது.

அதன்பிறகு, தெய்வம் 15 நாட்கள் ‘தனிமைப்படுத்தப்பட்ட’ நிலையில் (Quarantine) இருப்பதாகக் கருதி, அந்த நாட்களில் கோவிலின் நடை மூடப்படும்.

இந்த 15 நாட்கள் முழுவதும் தெய்வத்திற்கு ஆயுர்வேத கஷாயம் மற்றும் பச்சை மூலிகை மருந்துகள் மட்டுமே சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

15 நாட்கள் முடிந்த பிறகு, மீண்டும் அப்பகுதியைச் சேர்ந்த MBBS மருத்துவர்கள் வந்து தெய்வத்தின் ‘உடல்நிலையை’ பரிசோதிப்பார்கள். தெய்வம் முழுமையாக நலமடைந்துவிட்டதாக அவர்கள் குறியீட்டு முறையில் அறிவித்த பிறகே கோவில் நடை திறக்கப்பட்டு, மிக விமரிசையாக தேரோட்டத் திருவிழா கொண்டாடப்படும் என்பது அந்தக் கோவிலின் ஐதீகம்.

ஒடிசா மாநிலம், பூரி ஜெகந்நாதர் கோவிலிலும் இதேபோன்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 23
  • More
Comments (0)
Login or Join to comment.