·   ·  313 posts
  •  ·  0 friends

எம்.ஜி.ஆர் அவர்களின் பண்பு

இது அந்தக்காலம்.. மனிதரை மதிக்கும் மனிதநேயமிக்க நிகழ்வு..

ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் நெடுஞ்செழியன்...

விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கி செல்கின்றனர்

இப்போது ராதா அவர்கள் விருதுவாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நாவலர் நெடுஞ்செழியனை வைத்து தரச் செய்கிறார். ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி.

ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!! மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!! குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி ...!!!

ராதா ஏதோ சொல்லமுயலும் போது. அவரை தடுத்த எம்.ஜி.ஆர் : "நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்....ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது?

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது.

  • 146
  • More
Comments (0)
Login or Join to comment.