
கணிதக் குறிப்புகள்
நாம் கணிதத்தில் பயன்படுத்தும் ÷ என்ற குறியின் பெயர் Obelus — தமிழில் வகுத்தற்குறி.
இது முதன்முதலாக 1659-இல் ஜோகன் ரான் என்பவர் எழுதிய நூலில் பயன்படுத்தப்பட்டது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் — நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான கணிதக் குறிகள் 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தோன்றியவை. அதன் பிறகு மிகச் சில குறிகளே புதிதாக வந்தன.
அதற்கு முன்னர், குறிகளுக்குப் பதிலாக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக:
இன்று நாம் 9 + 10 என்று எழுதுவதை அப்போது "ஒன்பது கூட்டல் பத்து" என்று எழுதினர்.
அதே போல + மற்றும் − குறிகளும் பழங்காலத்தில் இல்லை.
இவை 1489-க்கு பிறகுதான் பயன்பாட்டில் வந்தன.