·   ·  1081 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 22.2.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த திருப்தியின்மை விலகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். பணி நிமித்தமான ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வங்கிப் பணிகளில் இருந்த தடைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மிதுனம்

நிர்வாக சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயணம் வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மீக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். வாழ்க்கை துணைவரால் ஆதாயம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கடகம்

உறவினர்களுக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாடங்களில் ஆர்வமின்மை ஏற்படும். பயணத்தில் விவேகம் வேண்டும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். அரசு காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சிம்மம்

புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிர்வாக சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் திறமைகள் வெளிப்படும். வாக்கு வன்மை மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உலோக தொடர்பான பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கன்னி

உறவினர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் மேம்படும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வர்த்தக பணிகளில் லாபங்கள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

பூர்வீக சொத்துக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபகரமான சூழல் காணப்படும். செல்வ சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விருச்சிகம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனை சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபார ரீதியான சந்திப்புகள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அரசு காரியத்தில் ஆதாயகரமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்கள் வழியில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கும்பம்

பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வர்த்தக வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவம் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணிகளில் சில மாற்றமான தருணங்கள் அமையும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கல்வி செயல்களில் ஆர்வமின்மை உண்டாகும். கற்றல் திறனில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறைகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பூர்விக சொத்துக்கள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 35
  • More
Comments (0)
Login or Join to comment.